மட்டக்களப்பில் வெடித்தது போராட்டம்

இன்று காலை மட்டக்களப்பு பாலமீன்டு மாமாங்கம் அமிர்தகழி பாலமுனை சவுக்கடி மற்றும் பூநொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வாழும் மீனவ குடும்பங்கள் மற்றும் மீனவ நிர்வாகத்தினர் தங்களுடைய வாழ்வாதாரங்கள் அளிக்கப்படுவதாக கூறி ஒரு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை ஒழுங்குபடுத்தியிருந்தார்கள். சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி அவர்கள் உடைய கரையோர மீன்வளத்தை அழிப்பதாகவும் அந்த சட்டவிரோத நடவடிக்கை உடனடியாக நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நீரியல்வள திணைக்களத்துக்கு முன்பாக அந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அந்த போராட்டத்தின் போது பல மீனவ குடும்பங்களும் கிழக்கு மாகாண மீனவர் சங்க உறுப்பினர்களும் அந்த பிரதேசத்திற்குரிய ஏனைய மீனவர் சங்க உறுப்பினர்களுமாக இணைந்து போராட்டத்தை நடத்தி இருந்தார்கள் இதன்போது அவர்கள் பல கோஷங்களை முன் வைத்தார்கள் அதிலேயே உடனடியாக சட்டவிரோத மீன்பிடியை நிறுத்து
அடிக்காதே அடிக்காதே மீனவர்களுடைய வயிற்றில் அடிக்காதே
லஞ்சம் பெறும் அதிகாரிகளை உடன் அகற்று போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டன.
இந்த கதிரைகளில் இருக்கின்ற அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாகவும் தங்களுக்கு சாதகமானவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டு தங்களுடைய சிறிய அளவிலான தொழிலை அழிப்பதற்காக திட்டம் மேற்கொள்வதாகவும் இந்த போராட்டக்காரர்கள் கூறியிருந்தார்கள்.
6:03 pm