திருக்கோவில் பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது!!

தமிழ் தேசம் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டபோது, தமிழ் மக்கள் உயிர்காக்க உதவிய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும் வகையில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு கிழக்கு மாகாண திருக்கோவிலில் பிரதேசத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
காயத்திரி கிராமத்திலுள்ள கௌரி அம்மன் கோவில் முன்றலில் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் புஸ்பராசா துசானந்தன் அவர்களது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.

 

10:27 am

எமது இலக்குகள்