தமிழின உச்சக்கட்ட முள்ளிவாய்கால் இனவழிப்பு நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வு நேற்று 2026/05/18 ஆம் திகதி திங்கட் கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு வாகரை முகத்துவாரத்தில் மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
