வயாவிளான், பலாலி மண் மீட்புப் போராட்டம் – 13ஆம் வாரம்!
சொந்த நிலத்தை இழந்து வீடற்றவர்களாக வாழும் மக்களின் நியாயமான உணர்வுகளுக்கு ஆதரவாகத் தமிழ்த்தேசியமக்கள்முன்னணி களத்தில்!
இன்றைய 13ஆம் வாரப் போராட்டத்தில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், கொள்கைப் பரப்புச் செயலாளர் நடராஜர் காண்டீபன், யாழ். மாவட்ட அமைப்பாளர் பொன் மாஸ்டர் பொன் மாஸ்டர், மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்தனர்.