தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மேற்கொள்ளப்பட்ட சென் மேரீஸ் உதைபந்தாட்ட அணியினரை கெளரவிக்கும் நிகழ்வு!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் சென் மேரீஸ் உதைபந்தாட்ட அணியினரை கெளரவிக்கும் நிகழ்வு 24/5/26 மாலை நாவாந்துறை மாதா கோவில் முன்றலில் இடம்பெற்றுள்ளது.
FFSL சாம்பியன்ஸ் கோப்பை (FFSL Champions Cup) தொடரில் சாம்பியன் பட்டம் வென்று,வரலாற்றுச் சாதனை படைத்து நாவாந்துறை மண்ணுக்கும் ஒட்டுமொத்த யாழ். மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த யாழ்ப்பாணம் நாவாந்துறை சென்.மேரிஸ் விளையாட்டுக் கழக வீரர்களைக் கௌரவிக்கும் மாபெரும் பாராட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாவாந்துறை சென்மேரிஸ் உதைபந்தாட்ட அணியினர் கடந்த 11.04.2026 அன்று அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளம் நடாத்திய போட்டியில் பங்குபற்றி சம்பியனாகியது. அதனைப் பாராட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களாலும் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களாலும் கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

11:09 am

எமது இலக்குகள்