மக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் தமிழின அழிப்பு நினைவு சுமர்ந்த ஊர்தி!!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பேரவையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு சுமந்த ஊர்தி மக்கள் அஞ்சலிக்காக இன்று இரண்டாவது நாளாக தென்மராட்சியின் பல பகுதிகளெங்கும் கொண்டுசெல்லப்பட்ட போது
பிரதேச மக்களால் மலர் தூவி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மக்கள் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்படும் நினைவு சுமந்த ஊர்தியானது, மே-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணை சென்றடையவுள்ளது,
நேற்றைய நாள் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலிருந்து நினைவு சுமந்த ஊர்தி மக்கள் அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1:43 pm

எமது இலக்குகள்