10.02.2021 அன்று தமிழர் தரப்பு குரலாக ஆற்றிய ஆங்கில உரையின் தமிழ் சாராம்சம்.
கனம் அவைத்தலைவர் அவர்களே!
இலங்கையில் தமிழர்கள் மீது இனப்படுகொலை இன்னமும் நடந்துகொண்டு இருக்கிறது ! என்பதை இனப்படுகொலையின் ஒரு சாட்சியாக நான் ஆணித்தரமாக இந்த அவையில் பதிவு செய்யவிரும்புகிறேன்.
இனப்படுகொலை நடக்கவில்லை என நீங்கள் சொல்லவிரும்பினால் ,உங்கள் ஜனாதிபதியை, உங்கள் பாதுகாப்பு அமைச்சரை இங்கு இந்த அவைக்கு நேரடியாக அழைத்து வாருங்கள், நாம் அது குறித்து நேரடியாக விவாதிப்போம்.
அதற்கு நான் தயார்!
இனப்படுகொலை நடக்கவில்லை என நீங்கள் கருதினால், ஒளித்து ஓடாமல், ரோம் சாசனத்தில் கையெழுத்து வைத்து விட்டு சர்வதேச நீதிமன்றில் சர்வதேச விசாரணைக்கு துணிந்து முகம்கொடுத்து நீங்கள் குற்றமற்றவர்கள் என நிரூபியுங்கள்.
அதைவிடுத்து இங்கு எனது பேச்சின் இடையே கத்தி கூச்சலிட்டு இடையூறு செய்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லை!
இனப்படுகொலை என்பதன் சட்டவிளக்கம் குறித்தும் இனப்படுகொலை இப்போதும் தொடர்கிறது எனும் கஜேந்திரகுமாரின் குற்றச்சாட்டு குறித்து, சஜித் அணியை சேர்ந்த ர்.ர்.னு சில்வா மற்றும் பொது ஜன பெரமுனவை நிவாட் கப்ரல் ஆகியோர் எதிர்த்து விவாதம் செய்தனர், ஐநா சபையின் விதிகள் இனப்படுகொலை என்பது வெறுமனே ஆட்களை கொல்வது மட்டும் அல்ல, ஒரு இனக்குழுமத்தின் ஃ தேசத்தின் அடையாளத்தை முழுமையாகவோ பகுதியாகவோ அழித்தல் என்பது கூட இனப்படுகொலைதான், அது இப்போதும் எமது மண்ணில் தொடர்கிறது.அதாவது தமிழ்ர்கள் மீதான இனப்படுகொலை இன்னமும் தொடர்கிறது எனவே அதற்கான நீதியை கோருவதற்குரிய உரிமை தமிழர்களுக்கு இருக்கிறது.
1)வடக்கு கிழக்கு என்பது தமிழ் பேசும் மக்களின் (தமிழர் மற்றும் முஸ்லிமகளின்) தாயக பிரதேசம் என்பதை ஏற்றுக்கொள்ளுதல்.
2)தமிழர்கள் தனியான ஒரு தேச அந்தஸ்துக்குரியவர்கள் என்பதை அங்கீகரித்தல் தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
3)சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட , மற்றும் இன்னமும் நடாத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற தமிழர்மீதான இனப்படுகொலை குறித்து விசாரிக்க சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றிற்கும் மற்றும் ஏனைய சர்வதேச பொறுப்புக்கூறல் நிறுவனங்களிடமும் பாரப்படுத்தல்.
போன்றவையே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணியில் சர்வதேசத்தை நோக்கி மக்களால் வலியுறுத்தப்பட்ட பிரதான கோரிக்கைகள்.
தமிழர்களை அழித்து, முஸ்லிம்களை அழித்து இந்த தீவு தனியே சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது என காட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஈற்றில் நீங்கள் நேசிக்கும் அந்த சிங்கள பௌத்த தேசம் சிதறுண்டு போவதிலேயே முடியும்.
அந்த உடைவு இப்போதே ஆரம்பித்து விட்டது.