08.09.2023 அன்று தமிழர் தரப்பு குரலாக ற்றிய ஆங்கில உரையின் சாராம்சம்
கனம் அவைத்தலைவர் அவர்களே!
அடுத்த நாடாளுமன்ற அமர்விலே ஈஸ்டர் குண்டு தாக்குதல்தொடர்பான விவாதம் நடைபெற இருக்கிறது. எனினும் துரதிஸ்டவசமாக நானும் எனது சக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கஜேந்திரனும் அவ்விவாதத்தின் போது இங்கு பிரசன்னமாகி இருக்க முடியாத காரணத்தினால் அது குறித்தானதும் சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் குறித்தானதுமான எனது கருத்துகளை இன்று இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
அந்த சனல் 4 காணொலியில் சொல்லப்பட்ட விடயங்கள், வடகிழக்கு மக்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு ஒன்றும் வியப்பானதல்ல, அது பழகிப்போன விடயங்கள் தான்.
மக்கள் எழுச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை (உழரவெநச iளெரசபநnஉல) அரசாங்கம் எவ்வாறு கொண்டு செல்கின்றது என்பது குறித்து போர் நடந்த காலப்பகுதியில் நாம் பலதடவை வெளிப்படுத்தி இருக்கிறோம்.
குறிப்பாக நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த 2001 -2010 வரையான காலப்பகுதியில், சிறிலங்கா அரசும் இராணுவமும் எவ்வாறு இதை மேற்கொண்டார்கள் என்பதை பலதடவைகள் நாம் சுட்டிகாட்டி இருந்தோம், துரதிஸ்டவசமாக நாம் சொல்வதை செவிமடுப்பதற்கு அப்போது யாரும் இருந்திருக்கவில்லை.
இன்று அவைக்கு தலைமை தாங்கும் நீங்கள், ஒரு கல்வியலாளர் எனும் அடிப்படையில் நான் சொல்வதைகருத்தில் எடுப்பீர்கள் என நம்புகிறேன்.
08.09.2023 அன்று தமிழர் தரப்பு குரலாக ஆற்றிய ஆங்கில உரையின் சாராம்சம்
கனம் அவைத்தலைவர் அவர்களே.
ஏன்நாங்கள் எப்போதும் இலக்கு வைக்கப்படுபவர்களாக, பாதிக்கப் படுபவர்களாக இருக்கிறோம்?
யுத்தமாக இருக்கட்டும், எதிர் புரட்சி நடவடிக்கைகளாக இருக்கட்டும், அங்கு முதலில் பலியிடப்படுவது “உண்மை” தான். இந்த இடத்தில் நான் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் பற்றி கூற விரும்புகிறேன். இந்த ஈஸ்டர் தாக்குதலை அதன் உண்மையான பின்புலத்துடனேயே நாம் பார்க்க வேண்டும்.
வந்திருக்கும் தகவலகளின் அடிப்படையில் இரு விடயங்கள் நடந்திருக்கலாம் எனும் முடிவுக்கு நாங்கள் வரலாம். ஒன்றில், தமக்கு தேர்தல் மூலமாகவோ அல்லது வேறுவிதமாக கிடைக்கும் அனுகூலங்களுக்காக அரசாஙகமே பின்னணியில் இருந்து இந்த ஒரு குரூர தாக்குதலை நடத்தியிருந்திருக்கலாம். அல்லது, இப்படியான ஒரு தாக்குதல் சில தீவிரவாத குழுக்களினால் நடைபெறபோகிறது என்பதை தெளிவாக அறிந்து கொண்ட அப்போதைய அரசாஙகம், தமது இராணுவபுலனாய்வு கட்டமைப்பின் தொடர்புகளின் ஊடாக, ஏதோ ஒரு வழியில், அவர்கள் எவ்வாறு அந்த தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என்பதை வழிநடத்தி இருந்தார்கள். இப்படியான ஒரு பாரிய அழிவுடனான குண்டுத்தாக்குதல் நடைபெற இருப்பதை அறிந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை விடுத்து, அந்த தாக்குதல் எப்படி நடைபெறவேண்டும் எனும் நடவடிக்கையை அரசே முன்னெடுத்திருக்கலாம்.
சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை இப்படியாக அம்பலப்பட்டு நிற்பது இது ஒன்றும் முதல் தடவையல்ல. விக்கிலீக்ஸ் ஆவணங்களில் அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஒருவர், மகிந்தராஜபக்ஸ கூறியதாக அமெரிக்க இராஜாங்க திணைக்கள் செயலருக்கு 2009.05.05 அன்று அனுப்பிய தகவல்களில் – “ வன்னி யுத்தகாலங்களில் மக்கள் வாழும் இடங்களிற்கு சிறிலங்கா அரச படையினர் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்ளாது, ஏனெனில் சிறிலங்கா இராணுவத்தை சேர்ந்த ஆழ ஊடுருவும் படையின் தமிழ் பேசும் முகவர்கள், தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பாதுகாப்பு வலயத்தினுள், வன்னி மக்களுடன் மக்களாக கலந்து நின்று புலிகளின் காப்பரணை உடைத்து வெளியேறும் வகையில் அவர்களை ஒழுங்குபடுத்தல்களை செய்து வருவதாக| அபோதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் நான் கூறவருவது என்னவெனில்.
இப்படியான வகையில் தமிழ் பேசும் இராணுவ துணைக்குழுக்கள் தமிழர் வாழும் பிரதேசத்துக்குள் ஊடுருவ விடப்பட்டு, அவர்கள் விடுதலைப்புலிகளோடு, வேறுபடுத்தி பிரித்தறிய முடியாதவாறு , இயங்கிவந்திருக்கிறார்கள் என்பதை ராஜபக்ஸ அவர்களே அமெரிக்க தூதரகத்துக்கு கூறியிருக்கிறார் என்பதைத் தான் நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
06.10.2020 அன்று ரணில் விக்கிரமசிங்க ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போது, சிறிலங்கா இரானுவ புலனாய்வுப் பிரிவானது தமிழ்பேசும் மக்களை இணையவிடாது தமிழர்களாகவும் முஸ்லிம்களாகவும் தனித்து பிரித்துவைத்திருப்பதற்கே எப்போதும் முனைப்புக்காட்டியது என தெரிவித்திருந்தார். (இவை 07.10.22 பத்திரிகைகளில் அறிக்கையிடப்பட்டிருந்தன.) தமிழர்களிற்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்துவற்கும் அதன் மூலம் முஸ்லிம்களை தனியானதொரு இனத்துவ அடையாளத்தை கோரவைப்பதற்குமாக கடுமையான பிரயத்தனம் செய்திருந்தனர்.
இதன்மூலம், தமிழ் பேசும் மக்களிற்கான அடையாளத்தை வலியுறுத்தி தன் அரசியல்பயணத்தை தமிழரசு கட்சி மூலம் மேற்கொண்டிருந்த முன்னாள் அமைச்ச்சர் கௌரவ அஸ்ரப் போன்றவர்களை கூட அதில் இருந்து விலகி, தனியானதொரு அடையாளத்தை கோரவைத்தது.
இவையெல்லாம் எதை வெளிப்படுத்துகிறது எனில், யுத்தத்தின் தன்மையும் அதை எவ்வாறு இராணுவம் கொண்டுநடத்தியது என்பதும் மிக மிக இரகசியமானதும் ஆழமானதுமான விடயங்களை கொண்டிருந்தது என்பதையும் அதனால், அதன் உள்ளிருந்து கூட ஒருபோதும் உண்மைகளை கண்டறியமுடியாது என்பதையும் தான் வெளிப்படுத்தி நிற்கிறது.
ஈஸ்டர் தாக்குதல்களை பொறுத்தவரை, ஒரு குறித்த கட்சிமீது இங்கு குற்றம் சுமத்தப்படுகிறது. ஆனால், இந்த இலங்கைத்தீவை இரு துருவங்களாக பிளந்த இனப்பிரச்சினை என வரும்போது, இந்தநாட்டின இனத்துவ பரிமாணங்களின் அடிப்படையில் இந்த நாட்டின் ஆட்சியை எப்போதும் தன்னகத்தே வைத்திருக்கபோவது சிங்கள பெரும்பான்மையினரே என்பதால், இந்த நாட்டின் அரச கட்டமைப்பு இனத்துவ ரீதியில் எப்போதும் பாரபட்சமானதாகவே இருக்கிறது.
ஆதலால், இந்நிலையில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டுமெனில் இங்கு ஒரு சர்வதேசவிசாரணையாலேயே அது முடியும். ஈஸ்டர் குண்டுதாக்குதலின் உண்மைகளை கண்டறிவதற்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் என நீங்கள் கூறுகின்றீர்கள்.
நான் இங்கு இருக்கும் உறுப்பினர்களை பார்த்து கேட்கிறேன்.
– உங்களுக்கு மனச்சாட்சி என ஒன்று இருக்குமானால், – உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படவேண்டும் என நீங்கள் கருதுவது உண்மையாக இருந்தால்,
– ஏன்நாங்கள் எப்போதும் இலக்கு வைக்கப்படுபவர்களாக, பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறோம்? தமிழர்கள் ஏன் அப்படி உணர்கிறார்கள்? என நீங்கள் உண்மையிலேயே கண்டறிய விரும்பினால்.
– தமிழர்கள் ஏன் இங்கு துருவமயப்பட்டு நிற்கிறார்கள் என்பதை கண்டறிய விரும்பினால்.
– எது தேவை என நீங்களே யோசித்து கொள்ளுங்கள்.
உண்மைகளை கண்டறியாமல் இவற்றை அடைய முடியுமா என்பதையும் உண்மைகளை கண்டறியாமல், இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு எதிர்காலம் இருக்கின்றது என நீங்கள் எவ்வாறு அவர்களுக்கு நம்பிக்கையைகொடுக்க முடியும் என்பதையும் நீங்களே உங்கள் மனச்சாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.
இந்த உண்மைகளை கண்டறிவதற்கு இங்கு இப்போது இருக்கின்ற ஒரே வழி, சர்வதேச விசாரணையொன்றுதான்.
உண்மைகளை கண்டறிவதில் இருந்து, சர்வதேச விசாரணைகளில் இருந்து ஏன் நீங்கள் ஒளித்து ஓடமுனைகிறீர்கள்? என்பதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.
இங்கே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சரத்போன்சேகா, ஈஸ்டர் தாக்குதலுக்கு ஒரு சரவ்தேசவிசாரனையை தனது நேற்றைய உரையில் கோரியிருந்ததாக செய்திகளில் படித்திருந்தேன்.
அந்த கோரிக்கையை நான் வரவேற்கிறேன்.
ஆனால் அதே சரவ்தேச விசாராணை, இங்கு நடந்த யுத்தம் குறித்தும் நடைபெற வேண்டும்.
இங்கே ஆளும் தரப்பிலும் சரி எம்மோடு இங்கு எதிர்த்தரப்பில் இருப்பவர்களும் சரி, எமது அமைப்பை விடுதலைப்புலிகளுக்கு சார்பான ஒரு அமைப்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்துவார்கள்.
அதேநேரம் விடுதலைப்புலிகள் யுத்தக்குற்றம் இழைத்ததாகவும் குற்றம் சுமத்துவார்கள்.
அப்படி நீங்கள் கூறுகிறபடி நாங்கள் விடுதலைப்புலிகளுக்கு சார்பானவர்களாக இருப்பின், நீங்கள் கூறுகிறபடி விடுதலைப்புலிகள் யுத்தக்குற்றம் இழைத்தவர்கள் எனில், நாங்களே கேட்கிறோம் , ஒரு சரவதேச விசாரானையை கொண்டுவாருங்கள் என. அதில் விடுதலைப்புலிகள் விசாரிக்கப்படுவார்கள் என்பதற்காக நாம் சர்வதேச விசாராணைக் கோரிக்கையில் இருந்து ஓடி ஒளியவில்லையே. உண்மைகளை கண்டறிவதற்கான ஒரு சர்வதேச விசாரணை குறித்து நாம் பயந்து ஓடவில்லை எனில், ஏன் நீங்கள் மட்டும் அதுகுறித்து பயந்து ஓடுகிறீகள்?
ஒளித்து மறைக்கவேண்டிய உண்மைகள் உங்களிடத்தில் இல்லாதவிடத்து நீங்கள் சர்வதேச விசாரணைகுறித்து ஓடி ஒளிய தேவையேயில்லை.
நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த நாடு சகலவிதத்திலும் அடிமட்டத்தை அடைந்திருக்கிறது.
இதிலிருந்து மீண்டு இனியாவது, ஒரு புதிய தொடக்கத்தை நாம் செய்யவேண்டுமாக இருந்தால், அனைவரும் அறியும் வகையில் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு, அவை மீள நிகழாமை உறுதிப்படுத்தப்படவேண்டும்.
அப்போதுதான் இந்த நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கெல்லாம் நீடித்து நிலைக்க கூடிய நேர்மையான ஒரு தீர்வு, உருவாகும்