யாழ். செம்மணியில் கிருஷாந்தியின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு- 07.09.2026



1996 செப்டம்பர் 7 (நாளை). சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான், யாழ்ப்பாணத்தின் அமைதியை ஒரு கொடூரமான பேரதிர்ச்சி உலுக்கியது.
சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி செல்வி கிருசாந்தி குமாரசுவாமி – கபொத சாதாரண தரத்தில் 7 Distinctions (அப்போது 8 பாடங்கள்) பெற்று, உயர்தர Chemistry பரீட்சையை எழுதிவிட்டு மிதிவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்
ஆனால், அன்று மதியம் கைதடியில் உள்ள அவளது வீடு அவருக்காக காத்திருந்தது மட்டுமே மிச்சம்.
கிருசாந்தி வீடு திரும்பவில்லை.
செம்மணியில் கைது செய்யப்பட்ட அவர் கைகளும் கால்களும் வாயும் கட்டப்பட்ட நிலையில் பங்கர் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்
மகள் வராத பதற்றத்தில், தாய் இராசம்மா, கிருசாந்தியின் தம்பி பிரணவன் மற்றும் அயல் வீட்டு நண்பர் கிருபாமூர்த்தி மூவரும் மிதிவண்டியில் செம்மணி பாதுகாப்புச் சோதனைச் சாவடிக்கு சென்றார்கள்.
அங்கு நின்றுகொண்டிருந்த சோமரத்ன ராஜபக்சவிடம், “எங்கள் மகளை இங்கே பார்த்ததாகச் சொல்கிறார்களே, எங்கே அவள்?” என்று கதறினர்.
விசாரணை என்ற போர்வையில் அவர்கள் மூவரையும் சோதனைச் சாவடிக்குள்ளேயே இழுத்துப் போட்டுப் பூட்டி வைத்தார்கள்.
அன்று இரவு செம்மணி சோதனைச் சாவடியில் மனித குலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய கொடூரம் நடந்தேறியது.
தங்கள் மகளை தேடி வந்த தாய் இராசம்மா, தம்பி பிரணவன், நண்பர் கிருபாமூர்த்தி மூவரையும் கயிறுகளால் இருபுறமும் இழுத்து மூச்சுத்தி*ணறடித்துக் கொ*ன்றனர்.
18 வயதுப் பெண் கிருசாந்தியை இரவு முழுவதும் பல இராணுவ வீரர்கள் தொடர்ச்சியாகக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.
ஆரம்பத்தில் கிருசாந்தி கொடூரமாகப் போராடி எதிர்த்துள்ளார். ஆனால், போராடப் போராட வலிதான் மிஞ்சியது.
நான்காவது அல்லது ஐந்தாவது நபர் அவளைச் சீண்ட வந்தபோது, அந்தப் பிஞ்சுப் பெண் தனது போராட்டத்தைக் கைவிட்டார் .
“எனக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள்… தயவுசெய்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்…” என்று கெஞ்சினார் .
ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்ததும், தன் விதியை நொந்தபடி அமைதியாகப் படுத்துக்கொண்டார்.
இரவு முடிந்ததும் கிருசாந்தியையும் கழுத்தை நெரித்துக் கொன்று, நான்கு உடல்களையும் செம்மணியில் உள்ள சதுப்புநிலக் குழியில் புதைத்தனர்.
யாழ்ப்பாணத்தில் 2 பாடசாலை மாணவர்கள் உட்பட 4 பேர் காணாமல் போனது சர்ச்சையானது
பாராளமன்றத்தில் அப்போதைய பாராளமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோஸ்ப் பரராஜசிங்கம் குரல் எழுப்பினார்
சட்டத்தரணிகள் மாமனிதர் குமார் பொன்னம்பலம் , பூபாலன் உட்பட்டோர் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உட்பட பல்வேறு தளங்களுக்கும் நெருக்கடியை எடுத்து சென்றனர்
இறுதியில் சம்பவம் நடந்து 45 நாட்களுக்குப் பிறகு, 1996 அக்டோபர் இறுதியில் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டன.
உடல்கள் மிகவும் அழுகிய நிலையில் இருந்தன.
1996 இல் இலங்கையில் DNA பரிசோதனை வசதி கிடையாது.
புதைகுழியில் வீசப்பட்டிருந்த ஆடைகளில் Dhobi Mark இருந்தது.
கைதடி பகுதியில் துணி துவைக்கும் சலவை தொழிலாளியை சாட்சியத்திற்கு அழைத்தனர்.
அந்த ஆடைகள், தான் குமாரசுவாமி குடும்பத்திற்குத் துவைத்துக் கொடுத்த ஆடைகள்தான் என்பதை அவர் உறுதி செய்தார்
கிருசாந்தியின் வெள்ளை நிறப் பள்ளிச் சீருடை, சிவப்பு Tie , காலுறைகள் மற்றும் தாய் இராசம்மாவின் குடலிறக்க (Hernia) அறுவை சிகிச்சை மருத்துவப் பதிவுகளை வைத்து உடல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டன
1998 ஆம் ஆண்டு நீதிமன்றம் சோமரத்ன ராஜபக்சே உள்ளிட்ட இராணுவத்தினருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
தீர்ப்பு வெளியான அந்த நிமிடத்தில், கூண்டில் நின்ற சோமரத்ன ராஜபக்சே நீதிமன்றத்தை அதிரவைத்தார்
“எனக்கு மரண தண்டனை விதிக்காதீர்கள்… செம்மணியில் புதைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் உடல்களை என்னால் காட்ட முடியும்!
அந்த ஒற்றை வாக்குமூலம்தான், இலங்கை அரசாங்கமும் இராணுவமும் மூடி மறைத்த “செம்மணி மனிதப் புதை*குழி” என்ற கொடூரமான உண்மையை உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியது
500 க்கு மேற்பட்ட உடலங்கள் மீட்கப்பட்டு விட்டன
International Truth and Justice Project (ITJP) மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர, மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர, மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன, பிரிகேடியர் லலித் ஹேவா, பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன, மேஜர் ஜெனரல் சசிக பெரேரா உட்பட பிரதான சூத்திரதாரிகளை அடையாளம் காட்டியிருக்கின்றது
சம நேரத்தில் உண்மைகளை மேலும் தெளிவாக அடையாளப்படுத்தவதாக சோமரத்தின ராஜபக்சே திரு அனுரகுமார திஸாநாயகவிற்கு கடிதம் எழுதி ஒரு வருடம் கடந்து விட்டது
ஆனால், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்று மேடைகளில் பேசும் ஜேவிபி பொய்யர்களுக்கு , பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற அரசியல் விருப்பம் எள்ளளவும் இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
உண்மைகளை வெளிக்கொணர நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என கதை சொல்லும் ஜேவிபி , மறுபுறம் அடையாளம் காட்டப்பட்ட பிரிகேடியர் சசிந்திர விஜேசிரிவர்தன மற்றும் மேஜர் ஜெனரல் சசிக பெரேரா ஆகியோருக்கு உயர்பதவிகளை வழங்கி கௌரவித்துக் கொண்டிருக்கிறது.
நீதியை நீர்த்துப்போகச் செய்யும் இந்த அதிகாரத்தின் முன் … கிருசாந்தி, தாய் இராசம்மா, பிரணவன், கிருபாமூர்த்தி ஆகியோரின் குருதி சிந்திய நிலமும், செம்மணி மண்ணும் இன்றளவும் நீதிக்காகக் கதறிக்கொண்டே இருக்கிறது.
நன்றி முகநூல் இனமொன்றின் குரல்